#Covid19

LatestNews

6 அடி தள்ளி இருந்தாலும் காற்றில் பறந்து வரும் வைரஸ்! அமெரிக்கா கண்டுபிடிப்பு!!!!

கொரோனா தொற்றுள்ளோர் 6 அடிக்கு அப்பால் இருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்படும் காற்றில் கலந்த வைரஸ் மற்றவர்களுக்கு மூச்சுக்காற்றின் மூலம் உட்புக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், கொரோனா தொற்றுள்ளோரிடம் இருந்து வெளிப்படும் வைரஸ் காற்றில் கலந்து ஆறடிக்கு அப்பால் உள்ள ஒருவருக்கும் தொற்ற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. காற்றோட்டம் குறைந்த, கூட்டம் அதிகமுள்ள உள்ளரங்கத்தில் தொற்றுள்ளோரின் சளியில் இருந்து வெளிப்படும் வைரஸ் அங்குள்ள பிறருக்குத் தொற்றும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Read More
LatestNews

உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை!!

தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை கொரோனா வைரஸ் தொற்று தொடரும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அதன் தலைவர் டொக்டர் அன்டோனியோ குட்டரஸ், உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் 75% வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சிறிய குழுவாக செயல்படும் குறிபிட்ட சில நாடுகள், உலகின் பெரும்பான்மையான தடுப்பூசிகளை தயாரித்து வாங்குகிறது. இந்த நாடுகள் உலகின் பிற நாடுகளின் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறது என்று அவர் கூறினார். எந்த Read More

Read More
CINEMAindiaLatestNews

உயிரிழந்த பிரபல தமிழ் நடிகர்! உடலை பார்த்து கதறிய மனைவி, 2 மகள்கள்

கொரோனாவால் உயிரிழந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா உடலை பார்த்து அவரின் மனைவியும் இரண்டு மகள்களும் கதறி அழுத புகைப்படம் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது. தமிழில் வல்லரசு, புதுப்பேட்டை, சிந்தனை செய், காலா, அசுரன், பேரன்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நிதிஷ் வீரா (45). கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த இவர், நேற்று முன் தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி Read More

Read More
LatestNews

இராணுவத்தளபதி வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு – மதுபான சாலைகள் பூட்டு!!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து பல்பொருள் அங்காடிகளில் இயங்கும் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் வரையில் குறித்த மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் இயங்கும் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More
LatestNews

யாழ் நகரில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மோட்டார் சைக்கில் படையணி!!!!!!!

நாட்டில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு இன்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை காணப்படுகின்றது இதன்காரணமாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினர் குறித்த போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Read More
LatestNews

சீன தடுப்பூசி கொள்வனவுக்கு 22 மில் . அமெரிக்க டொலர் – அனுமதி அளித்தது அமைச்சரவை!!

சீன தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசிகள் 14 மில்லியன் டோஸை கொள்வனவு செய்ய 22 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதற்கான அமைச்சரவைப்பத்திரத்தை முன்வைத்திருந்தார். நாடளாவிய ரீதியில் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read More
LatestNews

கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான சுற்று நிருபம்!!

வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்ற கொரோனா தொற்றாளர்கள் 15 – 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சுற்று நிருபமொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் தாமதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் பலர் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாணந்துறை வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களை வைத்தியசாலை வார்டுக்களில் தரையில் வைக்கப்பட்டிருந்தது Read More

Read More
indiaLatestNews

இறந்து போன தாயின் தொலைந்து போன மொபைல் வேணும்… இதயத்தை நொறுக்கிய சிறுமியின் பின்னணி!!

கொரோனாவால் உயிரிழந்த தனது தாயின் மொபைல் போன், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது திருடுபோய்விட்டதாகவும், அதில் தனது தாயின் புகைப்படங்கள் என ஏராளமான நினைவுகள் அடங்கியிருப்பதால் தயவு செய்து மொபைலை கண்டுபிடித்து தருமாறு கோரி காவல்நிலையத்தில் 9 வயது சிறுமி ஒருவர் புகார் மனு அளித்திருப்பது நெஞ்சை கரைய வைப்பதாக அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் குஷால்நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஹிரிதிக்‌ஷா, 4ம் வகுப்பு படித்து வரும் இச்சிறுமி தனது Read More

Read More
LatestNews

இலங்கைக்கு செல்ல வேண்டாம்! அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பு !!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.   அதில் தற்போதைய நிலையை கவனத்திற்கொண்டு 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் இலங்கையை அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது. இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

கொரோனா மரணங்கள் அதிகரிக்கக்கூடும்! இராணுவ தளபதி தகவல்!!

எதிர்வரும் நாள்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று இராணுவத் தளபதியும் கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும் அதேவேளை, கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைகின்றது. எதிர்வரும் நாள்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். ஒவ்வொருவரும் கொரோனாத் தடுப்பு சுகாதார விதிமுறைகளை Read More

Read More