உயிரிழந்த பிரபல தமிழ் நடிகர்! உடலை பார்த்து கதறிய மனைவி, 2 மகள்கள்

கொரோனாவால் உயிரிழந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா உடலை பார்த்து அவரின் மனைவியும் இரண்டு மகள்களும் கதறி அழுத புகைப்படம் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

தமிழில் வல்லரசு, புதுப்பேட்டை, சிந்தனை செய், காலா, அசுரன், பேரன்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நிதிஷ் வீரா (45).

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த இவர், நேற்று முன் தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நடிகர் ரிதிஷ் வீரா. இவர் சென்னையில் தங்கி சினிமா பணிகளை செய்துவந்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதித்து சென்னையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிதிஷ் வீராவின் உடலை அவரது குடும்பத்தினர், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமரர் ஊர்தி வாகனத்தில் அவரது உடல் சென்னையில் இருந்து மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அவரது மகள்களும் மனைவியும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கலங்கச் செய்தது.

பிறகு அருகிலுள்ள பட்டிமேடு மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர் நிதிஷ் வீராவுக்கும், நந்தினி என்பவருக்கும் திருமணமாகி ஆறு வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *