சீன தடுப்பூசி கொள்வனவுக்கு 22 மில் . அமெரிக்க டொலர் – அனுமதி அளித்தது அமைச்சரவை!!
சீன தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசிகள் 14 மில்லியன் டோஸை கொள்வனவு செய்ய 22 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதற்கான அமைச்சரவைப்பத்திரத்தை முன்வைத்திருந்தார். நாடளாவிய ரீதியில் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.