விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள், செலவுகளை எளிதாக்க வேண்டும்….. ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சித் திட்ட பலன்களை இழக்க நேரிடும்….. பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை! !
விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள் மற்றும் செலவுகளை எளிதாக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன்,
குறித்த நடவடிக்கையை பிரித்தானியா மேற்கொள்ளவிட்டால் ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சி திட்டத்தின் முழுப் பலன்களையும் இழக்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது.
லண்டனுக்கான தனது உத்தியோகப்பூர்வ பணயத்தின் போது
ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஆணையர் இலியானா இவனோவா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.
ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் விசா மற்றும் பிரித்தானியாவுக்கான பயணத்துக்கான அதிக செலவுகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிரமங்களைத் தீர்க்க இரு தரப்பினரும் தங்களால் முடிந்ததை செய்வதாக இலியானா இவனோவா தெரிவித்துள்ளார்.