பிரித்தானியாவில் அடுத்துவரும் நாட்களில் இரத்த மழை எச்சரிக்கை!!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்துவரும் நாட்களில் இரத்த (சிவப்பு) மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் மழை பெய்வதுடன்,

இடி மின்னலுடன் கன மழையும்,

பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பில் நேற்றுவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில்,

மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இரத்த மழை என்பது,

பாலைவனத்தில் (சஹாரா) இருந்து அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும்போது உருவாகுவதாகும்.

ஆகவே,

மழை பெய்யும்போது சிவப்பு நிறத்தில் நீர்த்துளிகள் விழுவதைக் காண முடியும்.

இடியுடன் கூடிய ‘இரத்த மழையால்’ இந்த வாரம் பிரித்தானியாவின் வானம் சிவப்பு நிறமாக மாற்றக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று பிரித்தானியர்கள் கடும் வெயிலால் தவித்த நிலையில்,

இப்போது திடீரென வானிலை மாறி மழை பொழியும் நிலை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *