இன்று காலை தென்னிலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு(படங்கள்)!!

எல்பிட்டிய பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டில் Read More

Read more

கொடூரமான சோகம் நிகழ்ந்து இன்றுடன் 03 வருடங்கள் நிறைவு!!

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சக்ரான் காசீம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் Read More

Read more

பிரான்ஸ் தலைநகரில் குண்டுவெடிப்பு -09 பேர் காயம்(Video)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்குமாறு தேவையில்லாமல் அவசர இடங்களை ஒழுங்கீனம் செய்ய வேண்டாம் எனவும் பாரிஸின் தீயணைப்புத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.   ⚠️ EXPLOSION RUE ANDRÉ KARMAN, AUBERVILLIERS ⚠️ pic.twitter.com/dovOFWjCXO — YATTS (@okssuoM) March 4, 2022    

Read more

ஏமனில் சிறைச்சாலை மீது விமானத் தாக்குதல்….. குறைந்தது 70 பேர்!!

ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 70இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடுத்துவைப்பு மையம் அல்லது சிறைக்கூடம் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது. போர்ப்பதற்றம் அதிகரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் விமானத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்த  ஐ.நா. தலைமைச் செயலாளர் Read More

Read more

இந்திய – பாகிஸ்தான்  எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு!!

இந்திய – பாகிஸ்தான்  எல்லையான லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக்குண்டு வெடிப்பானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், குறைந்தது 3பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. “வெடிப்பின் தன்மையை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை அதிகாரி Read More

Read more

திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு…… ஜேர்மனியில் சம்பவம்!!

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். ஜேர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக்(Donnersbergerbrücke) ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து Read More

Read more

வீட்டுக்குள் குண்டுகள் வெடிக்கும் நிலை….. நளின் பண்டார!!

எரிவாயு கலப்பை மாற்றிய காரணத்தினால் இன்று வீட்டுக்குள் குண்டுகள் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று, தற்போது நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த அச்சுறுத்தல் நிலைமைகளை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வீடுகளில் உள்ளவர்களின் நிலைமை மிகவும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எரிவாயு கலப்பு குறித்த ஆய்வு அறிக்கையை சபைப்படுத்துங்கள். அதுமட்டுமல்ல சட்டவிரோதமாக இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்ட Read More

Read more

காபூல் நகரில் மீண்டும் குண்டுவெடிப்பு? பொதுமக்கள் பீதி

விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வெளியேறுவோர் காபூல் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் Read More

Read more

மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கை!!

எதிர்வரும் 21 ஆம் திகதியன்று தேவாலயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்புக் கொடி ஏந்தி இன,மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்கு இடம்பெற்ற சூழ்ச்சி போலவே, அந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்‍போதே பேராயர் இவ்வாறு Read More

Read more

ரஷ்ய பஸ்ஸொன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்து!!

ரஷ்யாவின் தென்மேற்கு நகரமான வோரோனேஜில் வியாழக்கிழமை மாலை பஸ்ஸொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்தி நிறுவனமான ‘TASS’ தெரிவித்துள்ளது. வெடி விபத்தின் போது பஸ்ஸில் 30இற்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகள் வெடிப்பு வாகனத்தை உள்ளே இருந்து கிழித்து, ஜன்னல்கள் மற்றும் குப்பைகள் எல்லா திசைகளிலும் பறக்க செய்ததை வெளிக்காட்டியது. வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் ஒரு பெண் இறந்தார், Read More

Read more