விறகுவெட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் Read More

Read more

முல்லையில் குண்டு வெடிப்பு சம்பவம்- விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட மேலுமொரு அபாயகர பொருள்!!

முல்லைத்தீவு சுவாமி தோட்டப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டிய போது குண்டு வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லதைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை சுவாமி தோட்டம் தென்னந்தோட்டப் பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போதே குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு Read More

Read more

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளியில் வெடிப்புச் சம்பவம்!!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட ஆட்டி வெட்டை எனும் பகுதியில் இன்று வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று மாலை 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. ஆட்டி வெட்டையின் பின் காணியில் காணி துப்பரவு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளை குப்பைக்கு தீ வைத்த போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read more