கொடூரமான சோகம் நிகழ்ந்து இன்றுடன் 03 வருடங்கள் நிறைவு!!

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சக்ரான் காசீம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்தனர்.

 

இந்நிலையில்,

தேவாலயம் பாதிப்படைந்து இன்று 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சாந்தி வேண்டி ஆராதனையில் ஈடுபட்டனர்.

கொழும்பு கொச்சிக் கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றின் மீது அடிப்படைவாத தீவிரவாதிகளால் சமகாலத்தில் தேவாலயங்களில் ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூசைகள் நடந்துகொண்டிருந்தபோது அதில் பங்கு பற்றியிருந்த மக்கள் நடுவில்  தீவிரவாத தற்கொலை குண்டுதாரிகளால்  இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

 

குண்டுத் தாக்குதல்களில் சுமார் 300பேர் பலியாகியுள்ளதுடன் பல நூற்றுக்கணக்கானோர்  படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இன்றுவரை அங்கவீனர்களாக நடமாடுகின்றனர்.

ஒரு குடும்பத்தில் பெற்றோர்,

பிள்ளைகள் அனைவரும் பலியான சம்பவம், பிள்ளைகள் இருக்க பெற்றோர்கள் பலியான சம்பவம், பெற்றோர்கள் இருக்க பிள்ளைகள் பலியான சம்பவம் என மேற்படி மூன்று தேவாலயங்களிலும் இந்த கோரமான குண்டு தாக்குதலில் பலியான குடும்ப உறவுகளின் அனுபவங்கள் மிகவும் துயரமானவை.

முழு நாட்டையும் சோகத்திற்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் இடம்பெற்ற தினம் கத்தோலிக்க திருச்சபையினால் கறுப்பு ஞாயி றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *