ரஷ்ய பஸ்ஸொன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்து!!
ரஷ்யாவின் தென்மேற்கு நகரமான வோரோனேஜில் வியாழக்கிழமை மாலை பஸ்ஸொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்தி நிறுவனமான ‘TASS’ தெரிவித்துள்ளது.
வெடி விபத்தின் போது பஸ்ஸில் 30இற்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகள் வெடிப்பு வாகனத்தை உள்ளே இருந்து கிழித்து, ஜன்னல்கள் மற்றும் குப்பைகள் எல்லா திசைகளிலும் பறக்க செய்ததை வெளிக்காட்டியது.
வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் ஒரு பெண் இறந்தார், மற்றொரு பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
பெரும் குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவின் வோரோனேஜ் கிளை, பஸ்ஸை பராமரிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவே விபத்துக்குக் காரணம்.
வெடிப்பின் சூழ்நிலைகளை நிறுவ உதவுவதற்காக மொஸ்கோவிலிருந்து வல்லுநர்கள் வோரோனேஜுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.