பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இனி புதிய நடைமுறைகள்!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தால் வெளியேறும் பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் நுழைவாயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக மேம்படுத்தல் திட்டங்கள் சிலவற்றை மேற்கொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி திட்டமிட்டுள்ளது.

அதன்கீழ் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் “ஒரு அடையாள அட்டை” (One ID) எனும் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு முதலாவது முனையத்தின் ஊடாக வெளியேறும் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயிலை அறிமுகப்படுத்தும் முன்னோடி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய வெளியேறும் முனையத்திற்கான உள்நுழை வாயிலில் இலத்திரனியல் கதவு அல்லது முக அடையாளத்தை கண்டறியும் இயந்திரம் (Electronic gate/ face recognition machines) பொருத்தப்பட்டு பயணிகளின் அடையாளத்திற்காக, செல்லுபடியாகும் இலத்திரனியல் உள்நுழைவு அனுமதிச்சீட்டை தன்னகத்தே வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் இலகுவாக பயணிகள் பரிசோதனைகளைப் பூர்த்தி செய்வதற்கான இயலுமை கிட்டும்.

சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கமைய அதற்கான முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *