விமான நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்!!
ஜெர்மனின் ஹம்பர்க்(Hamburg) நகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவரால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
காரில் வந்த குறித்த இனம்தெரியாத நபர் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.
தனது கையில் ஒரு துப்பாக்கியுடன் வந்திருந்த இவர் வானை நோக்கி 2 முறை சுட்டதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தினை நோக்கி ஓடியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் போது,
பாதுகாப்புப் பகுதியை உடைத்துக்கொண்டு வந்த சந்தேக நபரின் வாகனத்தில் 2 குழந்தைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் ,
இந்த நபரின் மனைவி காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு தனது 2 குழந்தைகளையும் இவர் கடத்தி சென்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து,
ஹம்பர்க் விமான நிலையத்தின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன்
விமான நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் கூட அடைக்கப்பட்டுள்ளது.
மேலும்.
இந்த துப்பாக்கிச் சூட்டினால் யாரும் காயம் அடையாமல் அதிஷ்டவசமாக தப்பியுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.