#Accident

LatestNewsTOP STORIES

A/L அனுமதிக்காகச் சென்ற மாணவிகள் விபத்து – ஒருவர் பலி, மற்றவர் படுகாயம் ….. உண்மை நிலை என்ன????(படங்கள், காணொளி)

  கிளிநொச்சி ஊற்றுப்புலத்திலிருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்தபோது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். விபத்தில் இறந்த மாணவி இந்தச் சம்பவம் நேற்று (15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலை ஒன்றில் கபொத சாதாரண Read More

Read More
LatestNews

யாழ் – காரைநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More
LatestNews

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்….. ஸ்தலத்திலே பலியானார் குடும்பஸ்தர்!!

மட்டக்களப்பு சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று செவ்வாய் கிழமை இரவு 7மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் எதிரே வந்த கன்ரர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 4 பிள்ளைகளின் தந்தையான கறுவாக்கேணியைச் சேர்ந்த து.விஜயநாதன் வயது 51 என்பவரே உயிரிழந்துள்ளார் Read More

Read More
LatestNews

முச்சக்கர வண்டி தடம்புரண்டு விபத்து!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சவிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றின் மீது, மட்டக்களப்பு பக்கமிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை Read More

Read More
LatestNews

கல்லடி பகுதியில் பாலத்திற்குள் பாய்ந்த லொறி!!

புத்தளம் கல்லடி பகுதியில் லொறியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை  அதிகாலை பாலம் ஒன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என புத்தளம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். புத்தளத்திலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு கம்பளையிலிருந்து சென்ற 20, 22, 25 வயதுடைய இளைஞர்கள் ஏழு பேர் இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஏழு பேரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். இதன்போது, குறித்த லொறியை செலுத்திச் சென்ற சாரதி மற்றும் ஒருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் Read More

Read More
LatestNews

அரச நிறுவனத்துக்கு சொந்தமான சொந்தமான பஜிரோவை அடித்து தூக்கிய தனியார் பஸ்….. வேம்படிச்சந்தியில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வேம்படி வீதி முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் தனியார் பேருந்தும் அரச திணைக்களம் ஒன்றிற்குச் சொந்தமான பஜிரோவும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்.மடம் வீதியூடாக வந்து கொண்ருந்த விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான பஜிரோ வேகமாக திருப்புவதற்கு முயற்சித்த போது கச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மோதித்தள்ளியுள்ளது. இருப்பினும் பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. எனினும், விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான Read More

Read More
LatestNews

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அம்பியுலன்ஸ் உட்பட ஒன்றுடன் ஒன்று மோதிய 5 வாகனங்கள்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காவல்துறையின் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த விபத்தானது கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களுள் காவல்துறையின் விஷேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

Read More
LatestNewsTOP STORIESWorld

ஏமனில் விமானநிலைய நுழைவு வாயில் அருகே பாரிய வெடி விபத்து…. சம்பவ இடத்திலேயே 12பேர் உடல் சிதறிப் பலி!!

ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்தச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா, என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை அன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய ரக வாகனம் வெடித்துச் சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் Read More

Read More
LatestNews

யாழ்.வடமராட்சி கப்பூது வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து…. ஒருவர் உயிரிழப்பு!!

இதில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிக்ஞையையும் தாண்டி பாலத்திற்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
LatestNews

இராணுவ பிக்கப் வாகனம் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து….. இளைஞன் படுகாயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா நகரப் பகுதியில் இராணுவ பிக்கப் வாகனமும் – மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (24) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துக் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் இருந்து, புகையிரத நிலைய வீதி நோக்க மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது, மக்கள் வங்கி முன்பாக நின்ற இராணுவ பிக்கப் ரக வாகனம் வீதியில் திடீரென திரும்ப முற்பட்ட வேளை மோட்டர் Read More

Read More