இராணுவ பிக்கப் வாகனம் – மோட்டர் சைக்கிள் மோதி விபத்து….. இளைஞன் படுகாயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியா நகரப் பகுதியில் இராணுவ பிக்கப் வாகனமும் – மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (24) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துக் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் இருந்து, புகையிரத நிலைய வீதி நோக்க மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது, மக்கள் வங்கி முன்பாக நின்ற இராணுவ பிக்கப் ரக வாகனம் வீதியில் திடீரென திரும்ப முற்பட்ட வேளை மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகள முன்னெடுத்துள்ளனர்.