டொலர் நெருக்கடியால் நடுக்கடலில் தவங்கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்!!

டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல்களில் இருந்து தரையிறக்கும் பணி இடம்பெறாது என ஐக்கிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நேரத்தில் டொலர்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் கப்பல்களுக்கான தாமதக் கட்டணமாக அதிகளவு டொலர்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித(Ananda Palitha) தெரிவித்துள்ளார்.

டீசல் கப்பல் ஒன்று 11 நாட்களில் வந்துள்ளதாகவும் கடந்த 28ஆம் திகதி வந்த பெற்றோல் கப்பலில் இருந்து இதுவரை தரையிறக்கம் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை இறக்குவதற்குத் தேவையான பணம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,

கப்பல்களுக்கு தாமத நிதியாக பாரிய தொகையை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *