முச்சக்கர வண்டி தடம்புரண்டு விபத்து!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சவிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றின் மீது, மட்டக்களப்பு பக்கமிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை நேரில் அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு, வானில் ஒரு பகுதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் திருப்பழுகாமத்தைச் சேர்ந்த இ.ரவிச்சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் அறிந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்டதுறையினர் உடன் ஸ்த்தலத்திற்கு விரைந்து அருகிலிருந்து சிசிரிவி காகொணிகளையும் அவதானித்து, விபத்துச சம்பவத்தை நேரில் அவதானித்தவரிகளிடமும் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *