எதிர்வரும் 20ஆம் திகதியுடன் ஆசிரியர்களுக்காகான விண்ணப்பத்திகதி நிறைவு!!
நடைபெறவுள்ள 2021 (2022) ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கபளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடுவர்களை தெரிவு செய்வதற்காக இணையவழியின் ஊடாக விண்ணப்பம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
கீழ்காணப்படும் எந்தவொரு முறையினூடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், குறித்த கட்டமைப்புகளுக்கு பிரவேசிப்பதற்காக விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரியான www.doenets.lk என்ற,
முகவரிக்கு பிரவேசதித்து “எங்களின் சேவை” என்ற தெரிவில் விண்ணப்ப பத்திரம் (பாடசாலை பரீட்சை) என்பதை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்ப பத்திரத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
* இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி செயலியினூடாக (Moblie Application) “DoE” என்ற தெரிவுக்கு சென்று ஒன்லைன் விண்ணப்பம் (பாடசாலை பரீட்சை) என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
* அவ்வாறு இல்லாவிட்டால் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து விண்ணப்ப பத்திரத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.