பாராளுமன்றில் மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்!!
அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று(27/07/2022) நாடாளுமன்றில் இடம்பெற்றது.
விவாதம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி,
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் மேலதிக 57 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.