பிரபல போதனா வைத்தியசாலையில் சிசேரியன் மயக்க மருந்து இல்லை….. பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படும் கர்ப்பிணித் தாய்மார்!!

அத்தியாவசியமான மார்கெய்ன்(Margin) என்ற மயக்க மருந்து தீர்ந்துவிட்டதால் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதுடன் சிசேரியன் சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,

வைத்தியசாலையில் பதினேழு மார்கெயின் குப்பிகள்(Margin Cubes) மட்டுமே உள்ளதாகவும், அவசர நோயாளிகளுக்குப் பயன்படுத்தினாலும் இரண்டு நாட்களுக்குப் போதாது எனவும் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனை மருத்துவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து மருத்துவமனை பணிப்பாளர் கருணாரத்ன,

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவுக்கு வைத்தியசாலையின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *