AI பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது பிரபல தனியார் தொலைக்காடசி!!
இந்தியாவின் ஒடிசா தனியார் தொலைக்காட்சி
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை(Artificial Intelligence Female News Reader) அறிமுகம் செய்துள்ளது.
லிசா(Lisa) என பெயரிடப்படவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்
ஒடியா(Odia) மற்றும் ஆங்கிலம்(English) என இரு மொழிகளிலும் செய்திகளை வாசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும்
ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை இன்ஸ்டாகிராம், முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக தளங்களிலும் பின் தொடரலாம் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.