நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ள ‘மகான்’!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’.
#கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
மேலும்,
சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,
இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி ‘மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *