இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலாக்கமாக குறையும் எரிபொருளின் விலைகள்….. முச்சக்கரவண்டி, பேருந்துகளுக்கான கடடனங்களும் குறைகின்றன!!
இன்று (29/03/2023) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
லங்கா ஐஓசி(Laka IOC) நிறுவனமும் இன்று (29/03/2023) இரவு முதல் சிபெட்கோவின்(CEPTRO) விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு,
புதிய விலை 340 ரூபா.
ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு,
புதிய விலை 375 ரூபா.
அத்தோடு,
ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் 80 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு,
புதிய விலை 325 ரூபா.
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு,
புதிய விலை 465 ரூபா.
மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 295 ரூபா.
அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
இன்று(29/03/2023) நள்ளிரவு முதல் உடன் அமுலாகும் வகையில் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதனால்,
அதற்கமைய முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில்,
முதலாவது மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி,
முதலாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் எனக் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இதற்கு முன்னர்,
முதலாவது கிலோமீற்றருக்கு 120 ரூபா மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 ரூபா என முச்சக்கரவண்டி கட்டணமானது அறவிடப்பட்டது.
இதேவேளை,
வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றர்களாக உயர்த்தக் கோரி பல தடவைகள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும்,
ஆனால் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை,
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் மற்ற கட்டணங்கள் திருத்தம் நாளை(30/03/2023) அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.