மின் கட்டண அலகுகளின் அதிகரிப்பு /குறைப்பு விபரம் நாளை அறிவிக்கப்படும்….. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!!
நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலைமையில் அரச சேவைக்கான கட்டணங்களும் அதிகரித்த வகையில் உள்ளன.
அந்த வகையில்,
எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்த போதிலும் அதற்கேற்றால் போல் தற்போதைய விலை குறைப்பு அமையவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறே,
தற்போது தென்பகுதியில் பலத்த மழை பெய்து மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் நீரேரிகள் நிரம்பி வழியும் நிலையில் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது அரசாங்கம்.
அந்த வகையில்,
மின் கட்டண அலகுகளின் அதிகரிப்பு விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(09/08/2022) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை,
அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்பது தொடர்பாக திறைசேரி எதனையும் தெரிவிக்கவில்லை.
மேலும்,
நீர் மின் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க முடிந்தால் தினசரி மின்வெட்டை நிறுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.