மது வரி திணைக்கள அதிகாரிகளுக்கு….. வடக்கு ஆளுநர் கடும் எச்சரிக்கை!!
வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் யாழ் மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது சீறிப்பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (26/10/2023) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக இயங்கும் மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியெழுப்பிய ஆளுநர் இவ்வாறு சட்டவிரோத மதுபான சாலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதனால்தான் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானம் இழக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கூட திணைக்களத்திற்கு பொறுப்பானவர்கள் பங்குபற்றவில்லை. அவருக்குப் பதிலாக உதவி அத்தியட்சகர் தான் ஒவ்வொரு முறையும் இந்த கூட்டத்திற்கு வருகிறார்.
சட்ட விரோத மதுபான சாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மதுவரித் திணைக்களத்திற்கு இருப்பதனால் அதற்கேற்றாற்போல் செயற்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும்,
அடுத்த குழுக்கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபான சாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விவரத்துடன் வரவேண்டும் என்ற கோரிகையையும் விடுத்து எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.