27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா!!

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படுகிறது.

இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால் அமைக்கப்பட்ட இந்த பகுதி பாழடைந்த கடல் கோட்டையின் மீது அமைந்துள்ளது.

சீலாந்தின் பரப்பளவு 6000 சதுர அடியில் பரவியுள்ளது. மைக்ரோ நேஷன் எனப்படும் இந்த கடல் நிலத்தை பலர் ஆக்கிரமித்தனர்.

பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி, ராய் பேட்ஸ் என்ற நபர் தன்னை சீலாந்தின் இளவரசராக அறிவித்தார்.

ராய் பேட்ஸ் இறந்ததிலிருந்து, அவரது மகன் மைக்கேல் ஆட்சி செய்து வருகிறார்.

ராய் பேட்ஸ் சீலாந்திற்கான தனியான தபால் தலைகள், பாஸ்போர்ட்கள் மற்றும் பணத்தை அறிவித்தார். நாணயத்தில் ராய் பேட்ஸின் மனைவி ஜான் பேட்ஸின் படம் உள்ளது.

இந்த நாட்டிற்கும் சொந்தமான கொடி உள்ளது.

அதில் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்கள் உள்ளன.

இந்த சிறிய நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் நன்கொடைகளை நம்பியே உள்ளது.

எனினும், தற்போது மக்கள் சுற்றுலாவுக்காக சீலாந்துக்கு பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதனால்,

வைரல்

அந்த நாட்டுக்கான வருமானம் அதிகரித்திருக்க கூடுமென நம்பப்படுகிறது.

இணைய புள்ளி விபரங்களுக்கமை சீலாந்தில் 27 பேர் மாத்திரமே உள்ளனர்.

சீலாந்தை தனி நாடாக அந்த நாட்டு இளவரசர் அறிவித்தாலும், சர்வதேச ரீதியில் குறித்த நாடு இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த காரணத்திற்காக,

உலகின் மிகச்சிறிய நாடாக தற்போது வாடிகன் நகரம் பதிவாகியுள்ளதுடன் வாடிகன் நகரம் 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இங்கு சுமார் 800 பேர் மாத்திரம் உள்ளமை குறிப்பிடதத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *