கொழும்பின் பிரபல பொது வைத்தியசாலையில் – மாற்றி செலுத்தப்பட்ட மருந்தால் பறிபோனது என் 21 வயது மகளின் உயிர்….. தாயார் குற்றச்சாட்டு!!

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளாறு காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,

அங்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் போது மகளின் நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சாமோதியின் தாய் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார் என பிரபல தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

Close-up medical syringe with a vaccine.

“எனது மகள் வயிற்று வலி காரணமாக கொட்டாலிகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் 10ஆம் திகதி பேராதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அதன்பிறகு அவர் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து 17ஆம் இலக்க வார்டிற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து சேலைன் ஏற்றப்பட்டது.

அத்துடன் இரு மருந்துகள் ஏற்றப்பட்டன.

அந்த மருந்துகளை ஏற்றும் போதே எனது மகள் ஏதோ நடப்பதாக கூறினாள்.

இதன்பின்னர் அவரின் கை, கால்கள் எல்லாம் நீல நிறமாக மாறிய நிலையில் அவர் அப்படியே விழுந்து விட்டாள்.

இன்று என் பிள்ளை உயிருடன் இல்லை.

எனக்கு இருந்தது ஒரேயொரு பெண் பிள்ளை.

அவருக்கு வேறு எந்த நோய்களும் இருக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *