கனடாவை உலுக்கிய ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட ஆறு பேர் கொலை….. இலங்கையர்களுக்கு கனடாவில் தடையா!!
கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கனடாவில் தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பத்திற்கு அறிமுகமானவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கொலைச்சம்பவமானது கனடாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் கனடா செல்ல முயலும் இலங்கையர்களுக்கும் பெரும் அச்சத்தை அளிப்பதாக இருந்தது.
இந்நிலையில்,
குறித்த விடயம் தொடர்பாக கனடா நாட்டின் குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலகத்திடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.
அதற்கு பதிலளித்த அதன் தகவல் தொடர்பு பிரதானி, கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிப்பது எமது கொள்கையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.