Sri lankan Airlines தாமதம்….. இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு!!

சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அண்மைய தாமதத்தினால் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக எட்டு விமானங்கள் தாமதமாக வந்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறி லங்கன் எயார்லைன்ஸின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், ‘காற்றின் 5வது சுதந்திரத்தின்’ கீழ் ஏனைய விமான நிறுவனங்களுக்கு உரிமைகளை வழங்கி, விமான சேவைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் சில விமானங்கள் தொழில்நுட்ப அல்லது வேறு சில காரணங்களால் சமீப காலங்களில் தாமதமாக வருகை தந்தமை அல்லது இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், இலங்கையின் தேசிய விமான நிறுவனமான சிறி லங்கன் ஏர்லைன்ஸ், பல விமானசேவைகளை இரத்து செய்ததற்காக மன்னிப்புக் கோரியது.

ஒரு அறிக்கையை வெளியிட்ட விமான நிறுவனம், கடந்த சில நாட்களாக, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களை தற்காலிகமாக தரையிறக்க வேண்டிய பல தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பல விமானங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது என தெரிவித்திருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *