FEATUREDLatestNews

மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு (Ministry of Education) முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபா வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இன்று (28.03.2025) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான காலணி கொள்வனவு செய்வதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.