வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திராயன் 3 விண்கலம்….. நிலாவின் தென்துருவதில் கால்பதித்த முதல் நாடாக இந்தியா சாதனை!!
உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வெற்றிப்பயணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தரையிறக்க காட்சியை இணையவழியில் நேரலையாக பார்த்துள்ளார்.
இதன்மூலம்,
விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4 ஆவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
இதன்மூலம்,
நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.
நிலவில் தரையிறங்கும் கலத்தின் தரையிறக்க காட்சியை இன்று(23/08/2023) மாலை 5.20 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.