எமது தற்போதைய நிலை குறித்து T.ராஜேந்தர் வெளியிட்ட பாடல்!!
தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான T.ராஜேந்தர் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த பாடலை வெளியிட்டுள்ளார்.
சாதனை தமிழா தயாரிப்பில், இலங்கையின் பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் எழுதிய “நாங்க வாழணுமா, சாகணுமா சொல்லுங்க” எனும் பாடலை T.ராஜேந்தர் பாடியுள்ளதுடன், சமீல் இசையமைத்துள்ளார்.
பொதுமக்களின் கோரிக்கைகளை செவிசாய்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கும் இப்பாடல் ஏப்ரல் 19 ஆம் திகதி றம்புகணவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சமிந்த லக்சானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.