இலங்கையின் கிபிர் விமானங்களை புதுப்பிக்கவுள்ள இஸ்ரேல் நிறுவனம்!!
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களை புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன் டொலர் இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய, விமானங்களின் கட்டமைப்பு புதுப்பிக்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கு புதிய ரேடார், தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் மறைப்புகள் வழங்கப்படவுள்ளன.
இதனைத் தவிர, இலங்கை விமானப் படை உறுப்பினர்களுக்கு இந்த புதுப்பித்தல் தொடர்பிலான நிபுணத்துவ பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.