கர்ப்பிணி பெண்ககளிற்கு முக்கிய எச்சரிக்கைத் தகவல்….. வைத்தியர் சித்ரமாலி டி சில்வா!!

கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா (Chitramali de Silva) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பை காண முடிந்துள்ளது.

எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதேநேரம், பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *