இரவு வேளை வீட்டிற்குள் நுழைந்த மர்மக் கும்பலின் அராஜகம்!
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த மர்மக் குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு 7.30 மணியளவிலேயே மர்மக் கும்பல் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மர்மக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்ட வீட்டுவளாகத்தில் வாடகைக்கு வசித்துவரும் இளைஞரையும், யுவதியையும் தேடியதுடன், அவர்களை காணாத நிலையில் வீட்டின் உரிமையாளர்களை அச்சுறுத்தி, வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, யாழில் இருந்து வருகைதந்த நபர்களே குறித்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும், காதல் விவகாரம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
org under Record ID 1 X6AJ propecia vs generic finasteride