இந்திய மீனவர்களுடனான தொடர்பு – வடக்கு மீனவர்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மீனவர்களிடம் மீன்பிடி திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மீன்பிடி திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளதாவது,
இந்திய மீனவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பொருள்கள் பரிமாறுதல் போன்ற எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டாம். இந்தியாவிலிருந்து மஞ்சள் மற்றும் சட்டவிரோத பொருள்களைக் கொண்டு வருவதையும் தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.