கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் பார்த்திபனுக்கு ஏற்பட்ட சிக்கல்…. கவலையுடன் மகள் வெளியிட்ட பதிவு

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன் என்பதும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்கிய ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒரே ஷாட்டில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவிட் தடுப்பு ஊசி போட்டதால் முகவீக்கம் ஏற்பட்டது என்றும், அதனால் தன்னால் தேர்தல் தினத்தில் ஓட்டு போட செல்ல முடியவில்லை என்றும் சமீபத்தில் பார்த்திபன் கூறியதைப் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அவர் கோவிட் தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டதாக கூறி அதனால் ஏற்படும் அலர்ஜி குறித்தும் தனது மகள் கீர்த்தனா கூறிய தகவல் குறித்தும் தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் பார்த்திபன் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது என் அன்பு மகள் கீர்த்தனா இத்த’கவலை’ பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை! ஒவ்வாமை (allergy) சில சமயங்களில் உணவு, ஒப்பனை, அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு. பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும்.

இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது. எனவே தடுப்பூசி அவசியமானது. but ஜூரம், உடல் வலி போன்ற ஒரு reaction வந்து போகலாம். என் உடல் நலன் மீது அக்கரை கொண்ட அனைவருக்கும் நன்றி இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *