முன்னணி இயக்குனரால் கர்ப்பம் ஏற்பட்டு பின் கருக்கலைப்பு செய்தேன் என கூறிய பிரபல நடிகை!!

முன்னணி இயக்குனருடன் கொண்ட உறவால், கர்ப்பம் ஏற்பட்டு பின் கருக்கலைப்பு செய்தேன் என பிரபல நடிகை தெரிவித்து உள்ளார்.

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகை மந்தனா கரீமி.
பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான மந்தனா, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில், 2வது இடமும் பிடித்து உள்ளார்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கவுரவ் குப்தா என்பவரை 2016ம் ஆண்டு ஜூலையில் சந்தித்து உள்ளார்.
பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
எனினும்,
இந்த திருமணம் ஒரு சில மாதங்களே நீடித்தன.
அதன்பின் இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில்,
நடிகை கங்கனா ரணாவத் நடத்தும் லாக்-அப் என்ற நிகழ்ச்சியில் கரீமி பங்கேற்று உள்ளார்.
அதில்,
சமீபத்திய எபிசோட் ஒன்றில் கரீமியிடம் உங்களிடமுள்ள ஒரு ரகசியம் பற்றி கூறுங்கள் என கேட்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் வெளியேற்றுதல் சுற்றில் இருந்து தப்பிப்பதற்காக தனது வாழ்க்கையின் மிக பெரிய ரகசியம் ஒன்றை மந்தனா வெளியிட்டு உள்ளார்.
அதற்கு அவர், முன்னணி இயக்குனர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட ரகசிய உறவு பற்றி வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறும்போது, எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு ஒரு சில மாதங்களிலேயே வலுப்பெற்றது.
இதனால்,
என்னுடனேயே வாழ அவர் (இயக்குனர்) திட்டமிட்டார்.
ஆனால், இதனை வெளியில் யாருக்கும் கூறாமல் ரகசியம் காப்பது என இருவரும் முடிவு செய்தோம்.
ஏனெனில்,
எனது முன்னாள் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக பொறுத்திருந்தேன் என கூறியுள்ளார்.
இதன்பின் கரீமி கர்ப்பமடைந்து உள்ளார்.
இதனை தனது காதலரான அந்த இயக்குனரிடம் கூறியுள்ளார்.
அதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த பொறுப்புகளை ஏற்று கொள்ளும் அளவுக்கு மனதளவிலும், உணர்வுரீதியிலும் இன்னும் தயாராகவில்லை என மந்தனாவிடம் அவர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து உறுதியாக இருந்துள்ளார்.
இதனால்,
வேறு வழியின்றி மந்தனா கருக்கலைப்பு செய்யும் முடிவுக்கு செய்துள்ள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதனை கூறும்போது, மந்தனா, சக போட்டியாளர்கள் மட்டுமின்றி நடிகை கங்கனா ரணாவத்தும் கண்கலங்கினார்.
அந்த இயக்குனர் பெண் உரிமைகள் பற்றி பேசுபவர்.
பலருக்கு கடவுளாக இருப்பவர் என்றும் மந்தனா பேசும்போது கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *