யாழ்ப்பாணத்தில் இரண்டு பகுதிகள் உட்பட இலங்கையில் தனிமைப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் விபரம் வெளியானது!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரவலப்பிட்டிய, வத்தளை, ஹேகித்த, பள்ளியாவத்தை தெற்கு , மாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரங்கபொக்குன, கல்லுடுபிட்டிய மற்றும் மத்துமகல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட தெற்கு கிராமசேவகர் பிரிவின் விஜித மாவத்தை ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் வித்யாசர கிராம சேவகர் பிரிவின் போசிறிபுர பிரதேசம், மகாவஸ்கடுவ வடக்கு கிராம சேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டதொலவத்த மேற்கு கிராம சேவகர் பிரிவின் கொரத்துஹேன கிராமம் ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டம் யாழ் மாவட்டத்தில் கொடிகாமம் மத்தி மற்றும் கொடிகாமம் வடக்கு ஆகிய பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *