நாளை முதல் மேலும் சில பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றது!
தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த பாடசாலைகளை நாளை (30) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரும்பாலானோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியானதிலேயே வர்த்தகர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.