மட்டக்களப்பில் கடுமையான சட்ட நடவடிக்கை- முதல்வர் தீர்மானம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இதன்போது கொரனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக நாடு படுமோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாநகரை அதிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. சுகாதார நடைமுறைகளை கடுமையாக்கவும் அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளைப் பேணாத வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பு அமைப்புகளை மீளபுனரமைத்து செயற்பாடுகளை முன்னெடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. பொலிஸார், சுகாதார பிரிவினர் முன்னெடுக்கும் கொரனா தடுப்பு செயற்பாடுகளுக்கு மாநகரசபையின் முழுமையான ஆதரவினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியினை கொரனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பான விசேட கொவிட் செயலணிக்கூட்டம் இன்று நடைபெற்ற பேது,  மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன், மாநகரசபையின் பிரதி ஆணையாளர் சிவராஜா மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *