மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம்….. பிரதமர் ரணில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வர்த்தக சபைகள், திறைசேரி மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் பிரதிநிதிகளை சந்தித்து புதிய வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ​​மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் யுத்தத்துடன், உள்ளூர் சந்தையின் தவறான நிர்வாகத்தினால் உணவுப் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இந்த உணவுப் பற்றாக்குறை இலங்கையை மாத்திரமன்றி உலக சந்தையையும் பாதிக்கும்.

பற்றாக்குறையின் தாக்கத்தை குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

மேலும், பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *