TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

இந்தியா எடுத்த திடீர் முடிவு….. இலங்கையில் ஏற்பட்ட தாக்கம்!!

வெங்காயத்துக்கு 40% ஏற்றுமதி வரியை விதிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்த நிலையில் இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 50 தொடக்கம் 70 ரூபாய் வரை அதிகரித்து 200 முதல் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியாவில் வெங்காய விலை அதிகரித்துள்ளதன் காரணமாக டிசம்பர் 31ஆம் திகதி வரை மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது. இதன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் கோரவிபத்து….. உயிரிழந்த கணவன் – ஆபத்தான நிலையில் மனைவி!!

யாழ்ப்பாணம் -நாவற்குழி சந்தியில் இன்று (19/08/2023) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்துக்குள்ளானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பவுசர் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது. இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம்….. உறைந்துபோயுள்ள பரீட்ச்சாத்திகள்!!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதுமாத்திரமல்லாமல், க.பொ,த சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று (18/08/2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் பரீட்சைகள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மோட்டார் சைக்கிள் – காவல்துறையினரின் தண்ணீர் பவுசர் மோதி விபத்து….. துடிதுடித்து இறந்த கணவன் – ஆபத்தான நிலையில் மனைவி!!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று(19/08/2023) மதியம் மோட்டார் சைக்கிளும் – காவல்துறையினரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது காவல்துறையினரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புவனேஸ்வரன் மனோஜ் (வயது  31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார். மன்னாரை சேர்ந்த 26 வயது  மனைவி Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்!!

கடந்த 2018 ஆம் ஆண்டு 37 வயதான Rosangela Almeida dos Santos இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பிரேசிலின் வடகிழக்கில் உள்ள Riachao das Neves நகரில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. பிரேசிலில் பெண் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டதாகவும், சவப்பெட்டியில் இருந்து வெளியேற 11 நாட்கள் அவர் போராடியிருக்கலாம் என்றும் அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு 37 வயதான Rosangela Almeida dos Santos இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பிரேசிலின் வடகிழக்கில் உள்ள Riachao das Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வாகன பாவனையாளர்களுக்கு அவசர அறிவித்தல்….. போக்குவரத்து ஆணையாளர்!!

kஇலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பரமி தன்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளார். இந்த புதிய கணனி பயன்பாட்டின் மூலம் இலங்கையில் உள்ள முழு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஏற்ற இறக்கத்தில் தங்கத்தின் விலை….. மகிழ்ச்சியில் தங்க பிரியர்கள்!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினம்(17/08/2023) தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. அதன்படி, இன்றையதினம் (17/08/2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609113 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய தினம்(17/08/2023) 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 171900 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 22 கரட் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இரு வருடத்திற்கு மாத்திரம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டது….. டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானம்!!

இலங்கை விமானப்படையின் பாவனைக்காக இந்தியாவினால் டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானமொன்று(Tonier-228 maritime surveillance aircraft) பதிலீடாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின்(Tonier-228 maritime surveillance aircraft) வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிப்பதற்கான இன்று (16/08/2023) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தெஹிவளை மிருககாட்சிச்சாலையில் சோகமான சம்மபவமொன்று பதிவு!!

தெஹிவளை மிருககாட்சிச்சாலையில் பணியாற்றும் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் மரம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். நேற்று(15/08/2023) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 54 வயதான உபுல் செனரத் மரகண்டா என்ற பிரதான பாதுகாப்பு அதிகாரியே உயிரிழந்தவராவார். மிருகக்காட்சிசாலையின் பிரதான வீதிக்கு அருகில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாரிய மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த கம்பத்தில் மோதியுள்ளது. இதன்போது மதிய உணவை எடுத்து வந்த பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின்கம்பம் தலையில் மோதியுள்ளது. இதனால் அவர் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்….. இதுவரை வெளியாகாத சேத விபரங்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று(16/08/2023) காலை 6.45 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read More