மோட்டார் சைக்கிள் – காவல்துறையினரின் தண்ணீர் பவுசர் மோதி விபத்து….. துடிதுடித்து இறந்த கணவன் – ஆபத்தான நிலையில் மனைவி!!
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று(19/08/2023) மதியம் மோட்டார் சைக்கிளும் – காவல்துறையினரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது காவல்துறையினரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புவனேஸ்வரன் மனோஜ் (வயது 31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார்.
மன்னாரை சேர்ந்த 26 வயது மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.