FEATURED

FEATUREDLatestNewsTOP STORIES

மன்னாரில் 13 வயது சிறுமி காணாமல் போய் கண்டுபிடித்து ஒரு நாளில்….. தவறான முடிவெடுத்து மரணித்த சோகம்!!

மன்னாரில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பிரதான வீதி,எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று திங்கட்கிழமை(12/02 /2024) அதிகாலை அவரது வீட்டில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் வவுனியாவில் இருந்து மீட்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11/02/2024) வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் குறித்த துயர சம்பவம் இடம் பெற்றுள்ளமை தெரிய வருகிறது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

புலம்பெயர்ந்தோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரெஞ்சு குடியுரிமை கிடைக்காது….. பிரெஞ்சு அரசு அதிரடி அறிவிப்பு!!

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் வாழும் புலம்பெயர்ந்தோரின் உரிமை ஒன்றைப் பறிக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஒன்றிலுள்ள இரண்டு தீவுகள், 1973 ஆம் ஆண்டு பிரான்சுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தன. அவை பிரான்சின் கடல் கடந்த பிரதேசமாக Mayotte என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு, Mayotte முழுமையாக பிரான்சின் ஒரு பகுதியாக ஆனது. அதே தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த மற்ற தீவுகள் சுதந்திரம் கோரி தற்போது Comoros தீவுகள் என அழைக்கப்படுகின்றன. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று காலை முதல் மீண்டும் பணிபுறக்கணிப்பை ஆரம்பித்தன 72 சுகாதார தொழிற்சங்கங்கள் !!

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பானது, இன்று(13/02/2024) காலை 6 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று(12/02/2024) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதற்கமைய, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

விவாகரத்து பெறும் சராசரி வயது 48 என அறிவித்த கனடா…. அதிகரிக்கும் விவாகரத்துகள்!!

கனடாவில் வயது முதிர்ந்தவர்களின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்துச் செல்லவதாக தெரியவந்துள்ளது. இந்த விவாகரத்துக்களின் காரணமாக ஆண்களை விடவும் பெண்களே பெருமளவில் பாதிப்படைய வாய்ப்புக்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதேவேளை, கனடாவில் சராசரியாக விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. வயது கூடிய நிலையில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக விவாகரத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் சராசரி வயது 48 என கனடிய புள்ளி Read More

Read More
FEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

Football மைதானத்தில் மின்னல் தாக்கி இறந்த வீரர்….. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் (காணொளி)!!

இந்தோனேஷியாவில் கால்பந்து வீரர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த குறித்த வீரரை மின்னல் தாக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவின் சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையேயான கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன் போது, மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக Read More

Read More
FEATUREDLatestNewsTechnologyTOP STORIES

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த அறிவித்தலை ஆணைக்குழுவின் பணிப்பாளர் இன்று(12/02/2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் இல்லாத சிம் அட்டைகளை தொலைதொடர்பு சங்கத்திற்கு தொடர்பு கொண்டு துண்டித்துக் கொள்ளலாம். அதேவேளை, தெரியாமல் ஏனும் தங்கள் பெயரில் வேறு யாராவது சிம் அட்டைகளை பயன்படுத்தினால் அதனையும் உடனடியாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள், செலவுகளை எளிதாக்க வேண்டும்….. ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சித் திட்ட பலன்களை இழக்க நேரிடும்….. பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை! !

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள் மற்றும் செலவுகளை எளிதாக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், குறித்த நடவடிக்கையை பிரித்தானியா மேற்கொள்ளவிட்டால் ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சி திட்டத்தின் முழுப் பலன்களையும் இழக்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது. லண்டனுக்கான தனது உத்தியோகப்பூர்வ பணயத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஆணையர் இலியானா இவனோவா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியையின் FB, Insta கணக்குகள் முடக்கம்!!

தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா(Meta) ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியையின் முகப்புத்தக (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குகளை தடைசெய்துள்ளது. மெட்டா(Meta) நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதனால் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அயதுல்லா அலி கமேனியின் கணக்குகளுடன் ஈரானின் வலையைமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சுமார் 200 முகப்புத்தக(Facebook) மற்றும் 125 இன்ஸ்டாகிராம்(Instagram) கணக்குகளும் மெட்டாவால்(Banned by Meta) நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களை கமேனி ஆதரித்ததோடு காசாவில் இஸ்ரேலுக்கு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதல் சாதனை படைத்த “பெத்தும் நிஸ்ஸங்க”!!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தொடக்கஆட்டகாரர் பத்தும் நிஸ்ஸங்க இரட்டைசதம் அடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(9) கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

38 மில்லியன் ரூபாய் நிதியில் மன்னார் பொது வைத்தியசாலையில் புத்துயிர் பெற்ற சிகிச்சை பிரிவு!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இன்று வெள்ளிக்கிழமை(09/02/2024) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதி உதவியுடன் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த Read More

Read More