இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதல் சாதனை படைத்த “பெத்தும் நிஸ்ஸங்க”!!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தொடக்கஆட்டகாரர் பத்தும் நிஸ்ஸங்க இரட்டைசதம் அடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(9) கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணிசார்பில் தொடக்க ஆட்டக்காரரான பெத்தும் நிஸ்ஸங்க 139 பந்துகளில் 210 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற முதலாவது இரட்டை சதம் இதுவாகும்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆவார்.

இலங்கை அணி சார்பில்,

அவிஸ்க பெர்னாண்டோ 88 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மட் நபி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தான் அணி 382 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், மூன்று 20-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *