ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 21 ஊழியர்களுக்கு கொரோனா
இங்கிரிய பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 21 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் குறித்த தொழிற்சாலையில் தொழில்புரியும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில், மேலும் 140 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவிலேயே இவர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 21 பேரும் ரம்புக்கனவில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.