அதிக dose மருந்து கொடுத்ததால் கோமாவில் இருந்து குணமடைந்த செவிலியர்!!
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் 28 நாட்கள் கோமாவில் இருந்த பெண் அதிக அளவு வயாகரா மருந்து கொடுத்ததால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர் மோனிகா அல்மேடாக்கு (Monica Almeda) (37வயது) கடந்த அக்டோபர் 19 அன்று கொரோனா பரிசோதனை நடத்த பட்டபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானததை தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் 9ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மோனிகா நான்கு நாட்களில் அவருடைய ஒக்ஸிஜன் அளவு குறைந்தது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் லிங்கன் கவுண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
28 நாட்களுக்கும் மேலாக கோமாவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில்,
ஒரு சோதனை முயற்சியாக டிசம்பர் 14ம் திகதி மருத்துவர்கள் அவருக்கு அதிக அளவு வயாகரா மருந்து (Viagra Medicine)கொடுத்து உள்ளனர்.
அதன் பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இப்போது இரத்தத்தில் ஒக்ஸிஜன் அளவை அதிகரிக்க வயாகரா மருந்தைப் பயன்படுத்த முடியுமா என்று பரிசோதித்து வருகின்றனர்.