12 வயதில் உயிரியல் மருத்துவ விஞ்ஞான துறையில் பல்கலைக்கழக பட்டமொன்றை பெறவுள்ள சிறுமி!!

கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார்.

கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில்(University of Ottawa) உயிரியல் மருத்துவ விஞ்ஞான துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார்.

கனடிய வரலாற்றில் மிக இள வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை அன்தியா கிரேஸ் பெட்ரிசியா டென்னிஸ்(Anthea Grace Patricia Dennis) என்ற குறித்த  சிறுமி பெற்றுக்கொள்ள உள்ளார்.

பெட்ரிசியா டென்னிஸ் தனது ஒன்பது வயதில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

பட்டம் பெற்றுக்கொள்வது பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார் என பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *