2023 ஆரம்பித்ததிலிருந்து தனது நாணயத்தை தூக்கி எறிந்து….. யூரோவுக்கு மாறிய நாடு!!

புத்தாண்டு தினமான நேற்று(01/01/2023) குரோஷியா யூரோவுக்கு மாறியதோடு,

ஐரோப்பாவின் பாஸ்போர்ட் இல்லாத மண்டலத்திலும் நுழைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2023 புத்தாண்டின் நள்ளிரவில், பால்கன் நாடான குரோஷியா அதன் குனா(Croatian Kuna) நாணயத்திற்கு விடைகொடுத்து யூரோவுக்கு மாறியது.

அதாவது,

யூரோ நாணயத்தை பயன்படுத்தும் 20-வது ஐரோப்பிய உறுப்பினரானது.

மேலும்,

குரோஷியா இப்போது பாஸ்போர்ட் இல்லாத ஷெங்கன் மண்டலத்தில் 27-வது நாடாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மண்டலமான இதில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எல்லை கட்டுப்பாடுகளின்றி, கடவுசீட்டின் தேவையின்றி சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நேரத்தில்

உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில்

யூரோவை ஏற்றுக்கொண்டது குரோஷியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால்,

குரோஷியர்களிடையே உணர்வுகள் கலவையானவை.

எல்லைக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதை அவர்கள் வரவேற்கும் அதே வேளையில்

யூரோ மாற்றம் வாழ்க்கைச் செலவில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று சிலர் அஞ்சுகின்றனர்.

யூரோவின் பயன்பாடு ஏற்கனவே குரோஷியாவில் பரவலாக உள்ளது.

குரோஷியர்கள் நீண்ட காலமாக தங்களுடைய மிக விலையுயர்ந்த சொத்துக்களான கார்கள் மற்றும் குடியிருப்புகள் போன்றவற்றை யூரோவில் மதிப்பிட்டுள்ளனர்.

இது உள்ளூர் நாணயத்தின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது.

சுமார் 80 சதவீத வங்கி வைப்புத்தொகை யூரோக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் ஜாக்ரெப்பின் முக்கிய வர்த்தக பங்காளிகள் யூரோ மண்டலத்தில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *