வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்!!
வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்து பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார் என் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இவரின் உயிரிழப்புடன், வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது கொரோனா நோயாளி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.