விருந்தகங்கள், உணவகங்கள் வைத்திருப்போருக்காக புதிய சட்டம்….. எச்சரிக்கை அவசியம்!!

விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது,

உணவகங்கள் மற்றும் விருந்தகங்கள் பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் விருந்தகங்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நாட்டில்  உள்ள பல உணவகங்கள் மற்றும் விருந்தகங்களில் உணவு தயாரிப்பாளர்கள் மிகவும் அழுக்காக இருப்பதாக அண்மையில் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு,

எதிர்காலத்தில் மக்களுக்கு சுத்தமான மற்றும் தரமான உணவை வழங்கக்கூடிய உணவகங்கள் மற்றும் விருந்தகங்கள் நிறுவும் நோக்கில் உணவு பதப்படுத்துபவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *